பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

146



திருக்குறளார் தெளிவுரை 148 6, i{}. கேடுஅறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா நாடுஎன்ப நாட்டின் தலை. 736 பகைவரால் கெடுதல் என்பதனை அறியாததாய், கெட்டுப் டோன காலத்திலும் தனது வளம்குன்றாத நாட்டினை எல்லா நாடுகளிலும், தலையானது என்று நூலோர் கூறுவர். இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்அணும் நாட்டிற்கு உறுப்பு. 737 கீழ்நீர், மேல்நீர் எனப்பட்ட நீரும், வாய்ப்பான மலையும், அதிலிருந்து வரும் நீரும். அழியாத அரணும் நாட்டிற்கு உறுப்புக்களாகும். பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம் அணிளன்ப நாட்டிற்கு இவ் வைந்து. 738 நோய் இல்லாமையும், செல்வமும், நல்ல விளைச்சலும், இன்பமும், பாதுகாவலும் ஆகிய ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகாகும் என்று நூலோர் கூறுவர். . நாடுஎன்ப நாடா வளத்தன நாடுஅல்ல நாட வளந்தரும் நாடு. *39 நாட்டில் வாழ்பவர்கள் தேடி வருந்தாமல் தாமே வந்தடையும் செல்வத்தினை உடையதனை நாடு என்று நூலோர் சொல்லுவர். தேடி வருந்தச் செல்வம் அடிைவிக்கும் நாடுகள் நாடு ஆகா. அங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயம்இன்றே வேந்துஅமைவு இல்லாத நாடு. 74() வேந்தனோடு பொருந்துதல் இல்லாத நாடு எல்லாவிதமான குனங்களால் நிறைவு பெற்றிருந்தாலும் பயனுடையதல்: என்பத ாகும்.