பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அங்க இயல்147



பொருட்பால் அங்க இயல் 149 75. அரண் (நாட்டிற்குச் சிறப்பான அரண் - கோட்டை - விளக்கப்படுதல்) 1. ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள். 741 பலவகை ஆற்றலும் உடையவர்களாகப் பகைவர்மேல் செல்லுவோர்க்கு அரண் சிறந்ததாகும். அதுவே யன்றித் தம்மேல் வருவோர்க்கு அஞ்சித் தன்னை அடைவார்க்கும் அரண் சிறந்ததாகும். 2. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண். 了42 மணிபோலும் நிறத்தினையுடைய நீரும், வெள்ளிடை நிலமும், மலையும், குளிர்ந்த நிழலையுடைய காடும் உடையதே அரணாகும். 3. உயர்வு அகலம் திண்மை அருமைஇந் நான்கின் அமைவரண் என்றுஉரைக்கும் நூல். 7.43 உயர்ச்சியும், அகலமும், திண்மையும். அருமையும் என்று சொல்லப்பட்ட இந்த நான்கின் மிகுதியினையுடைய மதிலை அரண் என்று சொல்லுவர் நூலோர். 4. சிறுகாப்பின் பேர்இடத்தது ஆகி உறுபகை ஊக்கம் அழிப்பது அரண். 了44 காக்க வேண்டிய இடம் சிறியதாகவும், அகலமான இடத்தினையுடையதாகவும் அமைந்து தன்னை வந்து முற்றுகையிட்ட பகைவரின் எழுச்சியினைக் கெடுப்பதே அரனாகும். - 5. கொளற்குஅரிதாய்க் கொண்டகூழ்த்து ஆகி அகத்தார் நிலைக்குள்ளிதாம் நீரது அரண். 了45 வெளியாரால் கொள்ளுதற்கு அரியதாகி உள்ளே பலவகையான உணவினை உடையதாகி உள்ளிருப்போர் போர் செய்வதற்கு எளிய தன்மையுடையதே அரணாகும்.