பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

148



திருக்குறளார் தெளிவுரை F50 8, 10. எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துஉதவும் நல்லாள் உடையது அரண். 746 உள்ளே இருப்பவர்கள் வேண்டும்பொருள்கள் எல்லாம் உடையதாகி புறத்தோரால் அழிவு உண்டாகும்போது அவ்வாறு உண்டாகாமல் காக்க வல்ல வீரரைஉடையதே அரனாகும். முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும் பற்றற்கு அரியது அரண், 747 போக்குவரவு ஒழியும் வகையில் நெருங்கிச் சூழ்ந்தும், அவ்வாறு சூழல் நெகிழ்ந்தபோது இடம் நோக்கி ஒரு முகமாய்ப் போர் செய்தும், உள்ளிருப்போரை அவரைத் தெரிந்தோரால் கீழறுத்துத் திறப்பித்தும் புறத்தோரால் கொள்ளுதற்கு அரிதானதே அரணாகும். முற்றுஆற்றி முற்றி யவரையும் பற்றுஆற்றிப் பற்றியாள் வெல்வது அரண். - 748 படைப்பெருமையால் சூழ வல்லாராய் வந்து சூழ்ந்த பகைவரையும், தன்னைப் பற்றி நின்ற உள்ளிடத்து வீரரால் பற்றிய இடம் விடாமல் நின்று போர்செய்து வெல்வதே அரணாகும். முனைமுகத்து மாற்றலர் சாய வினை முகத்து வீறுஎய்தி மாண்டது அரண். 749 போர் தொடங்கியபோது பகைவர் கெடும் வண்ணம், உள்ளிருப்போர் செய்யும் செயல் வேறுபாடுகளால் வீறு பெற்று மேலும் வேண்டிய ஆட்சியினையுடையதே அரணாகும். எனைமாட்சித்து ஆகியக் கண்ணும் வினைமாட்சி எல்லார்கண் இல்லது அரண். 750 அரண் எனப்படும் கோட்டையானது மேற்கூறிய பெருமைகளையெல்லாம், பெற்றிருந்தாலும், செயல் புரிவதில் சிறப்புடைய வீரர்கள் இல்லாத போது அவைகளும் இல்லாதனவேயாகும்.