பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அங்க இயல்149



பொருட்பால் அங்க இயல் 151 76. பொருள் செயல்வகை (பொருள் செய்தலின் திறம், சிறப்பு முதலியன.) 1. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருள்அல்லது இல்லை பொருள். 751 ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் மதிக்கப்படுபவராகச் செய்யவல்ல பொருள் அல்லாமல் வேறு ஒருவனுக்குப் பொருளாவதில்லை. 2. இல்லாரை எல்லோரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு. 752 எல்லா நன்மைகளும் இருந்தாலும், பொருள் இல்லாதவர்களை யாவரும் இகழ்வர். எல்லாத் தீமைகளும் உடையவரானாலும், பொருள் வைத்திருப்பவரை யாவரும் உயரச் செய்வர். 3. பொருள்என்னும் பொய்யா விளக்கம் இருள்.அறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று. 753 பொருள் என்று கூறப்படுகின்ற பொய்யாத விளக்கானது தன்னை உடையவர்க்கு அவர் நினைத்த தேசத்திற்குச் சென்று பகை என்னும் இருளைக் கெடுக்கும். 4. அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து தீதுஇன்றி வந்த பொருள். T54 செய்யும் திறனறிந்து நல்வழியில் உண்டான பொருளானது அவனுக்கு அறத்தினையும் கொடுக்கும்; இன்பத்தினையும் கொடுக்கும். 5. அருளொடும் அன்பெர்டும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல். 755 குடிகளிடம் கொண்ட அருளுடைமையினாலும், அன்புத் தன்மையினாலும் வாராத பொருள் பெருக்கத்தினைப் பொருந்தாராகிக் கழிய விடுதல் வேண்டும்.