பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

150



திருக்குறளார் தெளிவுரை I53 i{}. . உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள். 756 உடையவர் இல்லாததால் தானே வந்த பொருளும், சங்கமாகிய பொருளும் தம் பகைவரிடமிருந்து திறையாகக் கொள்ளும் பொருளும் வேந்தனுக்கு உரிய பொருள்களாகும். . அருள்என்னும் அன்புஈன் குழவி பொருள்என்னும் செல்வச் செவிலியால் உண்டு, 757 அன்பு பெருகி அதனால் வந்த அருள் என்னும் குழவி. பொருள் என்னும் உயர்த்திச் சொல்லப்படும் செல்வத்தினையுடைய செவிலியால் வளரும். குன்றுஏறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்து ஒன்று உண்டாகச் செய்வான் வினை. 7.58 தன் கையில் பொருளினை வைத்துக்கொண்டு ஒரு தொழிலினை எடுத்துச் செய்தல், ஒருவன் மலைமேல் ஏறிநின்று யானைப் போரினைக் கண்டதை ஒக்கும். செய்க பொருளைச் செறுநர் செருக்குஅறுக்கும் எஃகு அதனிற் கூரியது இல். 7.59 தமக்கு ஒன்று உண்டாகக் கருதுபவர்கள் பொருளினை உண்டாக்குதல் வேண்டும். தமது பகைவர் செருக்கினை அறுக்கும் படைக்கலம் அதுவேயாம். அதற்கு அதுபோலக் கூரிய படைக்கலம் பிறிது இல்லை. ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு. 760 நல்ல வழியில் வரும் பொருளினை மிகுதியாகப் படைத்தவர்க்கு மற்றையதான அறமும் இன்பமும் ஒன்றாக அடைவதற்கு எளிய பொருள்களாகும்.