பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அங்க இயல்151



பொருட்பால் அங்க இயல் 153 77. படைமாட்சி (படையினுடைய சிறப்பும் நன்மையும்) 1. உறுப்புஅமைந்து ஊறுஅஞ்சா வெல்பட்ை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை. 761 படைக்குரிய உறுப்புக்களால் அமைந்து போரினிடத்து ஊறுபடுவதற்கு அஞ்சாமல் நின்று பகையினை வெல்வதாகிய படை, வேந்தனுடைய செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் தலையான செல்வமாகும். - 2. உலைவிடத்து ஊறுஅஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக்கு அல்லால் அரிது. 762 தான் சிறிதாக இருந்த இடத்தும் போரில் அழிவு வந்தால் அஞ்சாது நின்று தாங்கும் வன்கண்மை இவனுடைய முன்னோரைத் தாங்கிவரும் படைக்கு (தொன்று தொட்டு வருவது) அல்லாமல் உளதாகாது. 3. ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும். 763 எலியாகிய படை திரண்டு கடல்போல ஒலித்தாலும், நாகத்திற்கு என்ன துன்பத்தினைச் செய்ய முடியும்? அந்த நாகம் மூச்சு விட்டவுடனே அந்த எலிப்பகை கெட்டுவிடும். 4. அழிவின்றி அறைபோகாது ஆகி வழிவந்த வன்கண் அதுவே படை. 764 போரில் கெடுதல் இல்லாமல், பகைவரால் கீழறுக்கப்படாததாகித் தொன்றுதொட்டு வந்த வலிமையினையுடையதே அரசனுக்குப் படையாவதாகும். 5. கூற்றுஉடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை. 765 கூற்றுவனே கோபித்து எதிர்த்து வந்தாலும் நெஞ்சத் துணிவுடன் எதிர்த்து நின்று தாங்கும் ஆற்றலை உடையதே படையாகும்.