பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

152



திருக்குறளார் தெளிவுரை I54 iO. மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு. 786 வீரமும் மானமும் மாட்சிமைப்பட்ட வீரர் வழியில் செல்லலும் நம்பிக்கையுள்ளதும் ஆகிய . நான்கு குணங்களுமே சேனைக்குப் பாதுகாப்பாகும். . தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து. 767 பகைவரால் தன்மேல் வந்த போரினை விலக்குகிற வழிமுறையினை அறிந்து வகுத்துக் கொண்டு, அவரது படைத்தாக்குதலை, தன்மேல் வராமல் தடுத்துக்கொண்டு தான் அப்படையின் மேல் செல்வதே படையாகும். . அடல்தகையும் ஆற்றலும் இல்எனினும் தானை படைத்தகையால் பாடு பெறும். 768 . சேனைக்குப் பகைவரைக் கொல்லும் தன்மையும், சிறந்த வீரமும் இல்லையென்றாலும், தனது தோற்றப் பொலிவாலே பெருமையினை அடையும். சிறுமையும் செல்லாத் துணியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை. 769 குறைந்து சிறிதாகிக்கொண்டு போவதும், வெறுப்புணர்ச்சியும் வறுமையும் ஆகியவை இல்லாமலிருந்தால் அச்சேனையானது பகைவரை வெல்லும். நிலைமக்கள் சால உடைத்துஎனினும் தானை தலைமக்கள் இல்வழி இல். 770 போரில் நிலைத்து நிற்கும் வீரர் பலரை மிகுதியாகப் பெற்றிருந்தாலும், தனக்குத் தலைவர்களான தலைமை வீரர்கள் இல்லாதபோது சேனை நிற்காது.