பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அங்க இயல்153



பொருட்பால் w அங்க இயல் 155 78. படைச் செருக்கு (படையினது வீர மிகுதியினைக் கூறுவதாகும்.) 1. என்ஜமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்.என்.ஐ முன்னின்று கல்நின் றவர். 771 பகைவர்களே எனது தலைவனை எதிர்த்து நின்று இறந்து கல்லாய் நின்ற வீரர் பலராவர். ஆதலால் எனது தலைவன் முன்பாகப் போர் செய்து நிற்பதை நீக்குவீராக. : 2. கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது. 772 காட்டினில் ஒடும் முயலினைத் தப்பது எய்திய அம்பினை ஏந்துவதைவிட யானையின் மீது எறிந்து தப்பிய வேலினை ஏந்தி வருதல் இனிமையாகும். ro, 3. பேராண்மை என்ப தறுகண் ஒன்று உற்றக்கால் - ஊராண்மை மற்று.அதன் எஃகு 773 . பகைவர்மேல் கண்ணோடாமல் செய்யப்படும் வீரத்தினையே நூலோர், மிக்க ஆண் தன்மை என்று கூறுவர். பகைவர்க்கு ஒரு தாழ்வு வந்தபோது கண்ணோட்டம் செய்து அவர்க்கு உதவுகின்ற தன்மையினை, அந்த ஆண் தன்மைக்குக் கூர்மை என்று கூறுவர் நூலோர். 4. கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். 774 கைப்படையான வேலினை, தன்னை எதிர்த்து வந்த யானைமீது எறிந்து, வருகின்ற யானைக்கு வேல் தேடுபவன் தனது மார்பினிடத்தே பாய்ந்திருந்த வேலைக் கண்டு அதனைப் பறித்து மகிழ்வான். 5. விழித்தகண் வேல்கொண்டு எறிய அழித்து இமைப்பின் ஒட்டன்றோ வன்க ணவர்க்கு, 775 பகைவரைக் கோபித்து நோக்கிய கண், பகைவர் எறிந்த வேலைக் கண்டு பொறுக்காமல் இருக்குமானால் அது வீரர்க்குப் புறங் கொடுத்தலாகும்.