பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

154



திருக்குறளார் தெளிவுரை 156 i{} விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து. 776 தனக்குச் சென்ற நாட்களை எடுத்து எண்ணி அவற்றுள் போரில் சென்று சிறப்பான புண்கள். படாத நாட்களையெல்லாம் பயன்படாமல் கழிந்த நாட்களுக்குள்ளே வீரன் வைப்பான். * சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து. 777 உலகில் சூழ்ந்து நிற்கும் புகழினை விரும்பி உயிர் வாழ்தலை வேண்டாத வீரர் வீரக்கழலைக் கட்டிக் கொள்ளுதல் அலங்காரத் தன்மையினை உடையதாகும். . உறின் உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும்,சீர் குன்றல் இலர். 778 போர் வந்தால் தமது உயிர்ப்பொருட்டு அஞ்சாமல் போர்மேல் செல்லும் வீரர், தமது தலைவனாகிய இறைவன் (மன்னன்) அது வேண்டாம் என்று கோபித்தாலும் அவ்விர மிகுதியில் குன்றமாட்டார்கள். . இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர். 779 தாம் கூறிய வஞ்சினம் தப்பாமற்பொருட்டுப் போரிற் சென்று சாவவல்ல வீரரை அது தப்பியவாறு சொல்லி இகழ்ந்து பேசுவதற்குரியார் யார்? புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இந்துகோள் தக்கது உடைத்து. o 780 தமக்குச் செய்த நன்றிகளை நினைத்து ஆளும் அரசர் கண்களில் நீர் பெருகும் வகையில் போரில் சாகப் பெற்றால் அச்சாக்காடு இரந்தாயினும் (யாசித்தேனும்) பெற்றுக்கிெள்ளும் தகுதியினை உடையதாகும்.