பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அங்க இயல்155



பொருட்பால் அங்க இயல் 157 79. நட்பு (நண்பர்களைப் பற்றிய விளக்கமும் சிறப்பும், பயனும்) 1. செயற்குஅரிய யாவுள' நட்பின் அதுபோல் வின்ைக்குஅரிய யாவுள காப்பு. 781 நட்பினைப் போல செய்து கொள்ளுவதற்கு அரிய பொருள்கள் பாலுை உள? எவையும் இல்லை; அந்நட்பினைச் செய்து கொண்டால் அது போலப் பகைவர் செய்யும் தொழிலுக்கு அரிய பாதுகாப்பாவன யாவை உள? வேறு எவையும் இல்லை என்பதாம். - - င္ဆိုႏွစ္သို႔ நீரவர் கேண்மை பிறைமதிப் ன்நீர பேதையார் நட்பு. 782 அறிவுடையாருடன் கொள்ளும் நட்பு நாள்தோறும் பிறை மதியினைப் போல நிறையும் தன்மையினையுடையதாகும். பேதைமையுடையார் நட்பு நிறைந்தமதி குறையும் தன்மை போல நாள்தோறும் குறைந்து வருவதாகும். நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு. 733 நற்குணமுடைய மக்கள் தமக்குள் செய்த நட்பு பழகுந்தோறும் அவர்க்கு இன்பம் செய்தலாவது நூற்பொருள்களைக் கற்குந் தோறும் அந்நூலானது கற்றார்க்கு இன்பம் செய்தலை ஒக்கும் என்பதாம். . நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு. 784 ஒருவரோடு ஒருவர் நட்புச் செய்து கொள்ளுதல் தம்முள் நகைத்துப் பழகுவதற்காக அல்ல; நண்பனிடம் வேண்டாத செய்கை உண்டாகும்போது முற்பட்டுக் கண்டித்து அவர்க்குப் புத்திமதி சொல்லுதற்கேயாகும். . புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான். , நட்பாம் கிழமை தரும். - N. 785 ஒருவனோடு ஒருவன் நட்டாவதற்கு ஒரே இடத்தில் இருப்பதும் பழகுதலுமாகிய காரணங்கள் வேண்டியதில்லை. ஒத்த மனவு ணர்ச்சியே நட்பு என்கின்ற உரிமையைக் கொடுப்பதாகும்.