பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

2



திருக்குறளார் தெளிவுரை 2 8. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்திர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். - மெய், வாய், கண், மூக்கு, செவியாகிய ஐந்து பொறிகளின் வழியாக வரும் ஆசைகளை அறுத்தவனுடைய மெய்யான ஒழுக்க வழியில் நின்றவர்கள். எக்காலத்திலும் ஒரு தன்மையராய் வாழ்வார்கள். 7. தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. 7 தனக்கு ஈதாக எதனையும் ஒப்பிட்டுக் கூற முடியாவனுடைய தாள்களை நினைப்பவர்களுக்கு அல்லாமல், மற்றவர்களால் மனத்தில் உண்டாகும் துன்பங்களை நீக்க முடியாது. 8. அறஅழி. அந்தணன் தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால் பிறஅழி நீந்தல் அரிது s அறக்கடலாகிய இறைவனுடைய அடிகளாகிய தெய்வத்தினைச் சார்ந்தவர்க்கு அல்லாமல், மற்றவர்களுக்குப் பொருள், இன்பம் ஆகிய கடல்களை நீந்திக் கடத்தல் முடியாததாகும். 9. கோள்இல் பொறியின் குணம்இலவே எண்குளத்தான் தாளை வணங்காத் தலை. தத்தமக்குரிய புலன்களைக் கொள்ளுதல் இல்லாத மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளைப் போல அறிந்துணர்வதற்குரிய எளிமையான குணங்களையுடைய இறைவனுடைய தாள்களை வணங்காத் தலைகளும் பயன்படுதலுடையன அல்லவாம். 10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீத்தார் இறைவன் அடிசேராததார். 1 O இறைவன் அடிகள் என்னும் தெப்பத்தைச் சேர்ந்தவர்கள். பிறவியாகிய கடலை நீந்திக் கடப்பர். அவ்வாறு சேராதவர்கள் (நினைத்திருக்காதவர்கள்) நீந்த மாட்டார்கள்; அதனுள் அழுந்துவார்கள்.