பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

156



திருக்குறளார் தெளிவுரை 158 10, முகம்நக நட்பது நட்பு:அன்று நெஞ்சத்து அகம்நக நட்பது நட்பு. 786 கண்டபொழுது மனத்தால் அல்லாமல் முகத்தினாலே மட்டும் மலர்ந்து நட்புச் செய்வது நட்பு ஆகாது. அன்பினால் மனமும் மலர நட்புச் செய்வதே நட்பு என்பதாகும். அழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு. 787 கெடுதியினைத் தரும் தீய வழிகளில் செல்லும்போது நண் பனை அவ்வாறு செல்லாமல் விலக்கி நல்லவழிகளில் செலுத்துவதும் கெடுதல் வந்த போது தானும் உடனிருந்து அனுபவிப்பதுமே சிறந்த நட்பாகும். உடுக்கை இழந்தவன் கைடோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. 788 ஆடை குலைந்தவனுக்கு அப்பொழுதே கைசென்று உதவி செய்து இழிவினை நீக்குவதுபோல, நண்பூனுக்குத்துன்பம் வந்தபோது அப்பொழுதே சென்று உதவிசெய்து அதனை நீக்குவதே நட்டாகும். - நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்புஇன்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. 789 நட்பானது சிறப்பாக வீற்றிருக்கும் இடம் எதுவென்றால் அது எப்போதும் மாறுபாடு இல்லாமல் முடிந்த இடங்களில் எல்லாம் தளராமையினைத் தாங்கும் திண்மையாகும். இளையர் இவர்எமக்கு இன்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு. 790 'இவர் நமக்கு இத்தகைய நண்பர், யாம் இவர்க்கு இத்தன்மை யான் நண்பர் என்று வேறுபடுத்திக்கொண்டு ஒருவரையொ ருவர் சிறப்பித்தாலும் நட்புக்கு அது சிறுமையுடையதாகும்.