பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அங்க இயல்157



பொருட்பால் அங்க இயல் 159 so. நட்பு ஆராய்தல் (ஒருவரை நன்கு ஆராய்ந்தபின் நட்பினராக்குதல்) 1. நாடாது நட்டலின் கேடுஇல்லை நட்டபின் வீடுஇல்லை நட்புஆள் பவர்க்கு. 791 நட்பினை விரும்பி ஒருவரோடு நட்புச் செய்தபின் அந்த நட்பினை விட்டுவிடுதல் என்பது உண்டாகாது. ஆதலால் ஆராயாமல் நட்புச் செய்தல் போலக் கேடு தருவது பிறிதொன்றுமில்லை. - . ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும். 79.2 குணம் செய்கை முதலியவற்றைப் பலகாலும் பலவற்றாலும் ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவன் முடிவில் தான் சாதற்குக் காரணமான துன்பத்தினைத் தானே உண்டாக்கிக் கொள்ளுவான். , குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்துயாக்க நட்பு. 793 ஒருவனுடைய குணத்தினையும், குடிப்பிறப்பினையும், குற்றத்தினையும், குறைவற்ற குற்றத்தினையும் ஆராய்ந்தறிந்து அவனோடு நட்புச் செய்தல் வேண்டும். குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. 794 உயர்ந்த குடியின்கண் பிறந்து உலகோர் சொல்லும் பழிக்கு அஞ்சுபவனைச் சில கொடுத்தாயினும் நட்புக் கொள்ளுதல் சிறந்ததாகும். அழச்சொல்லி அல்லது இடித்து வழக்குஅறிய வல்லார்நட்பு ஆய்ந்து கொளல். 795 தான் தகாதது செய்யப் புகுந்தால் வருத்தம் உண்டாகுமாறு சொல்லி விலக்கியும், செய்தக்கால் பின்னும் செய்யாமல் நெருக்கியும், செய்ய வேண்டியதைச் செய்யத் தவறினால் செய்யுமாறு ஆக்க வல்லவர்களை ஆராய்ந்து நட்பினைச் செய்தல் வேண்டும்.