பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

158



திருக்குறளார் தெளிவுரை 160 10. கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல். 796 ஒருவனுக்குக் கெடுதி உண்டானால் அக்கெடுதியானது தனது நண்பர்களை உறுதியாக அளந்து பார்க்கும் கோலாகும். ஆதலால் அக்கெடுதியிலும் தெரிந்து கொள்ளுவதொரு நல்லறிவு உண்டு. . . . . ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல். - 797 ஒருவனுக்கு ஊதியம் என்பது யாதென்றால் அறிவில்லாதவருடன் கொண்ட நட்பினை ஒழித்து நீங்கி விடுவதாகும். . உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க அல்லற்கண் ஆற்றுஅறுப்பார் நட்பு. 798 தன்னுடைய ஊக்கம் சுருங்குவதற்குக் காரணமான செயல்களைச் செய்ய நினையாதிருத்தல் வேண்டும். அதுபோல, தனக்கு ஒரு துன்பம் வந்தபோது கைவிடுவார் நட்பினைக் கொள்ளாதிருத்தல் வேண்டும். , கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடும். 799 ஒருவன் கெட்டுப் போகும் காலத்தில் அவனைவிட்டு நீங்குபவர்களிடம் செய்துகொண்ட நட்பினை, தன்னிடம் கூற்றுவன் வருகின்ற காலத்தில் நினைத்தாலும் அந்த நினைப்பு உள்ளத்தினைச் சுடும். மருவுக மாசற்றார் கேண்மைஒன்று ஈத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு. 800 உலகத்தோடு ஒத்து வாழ்கின்ற குற்றமில்லாதவர்களுடைய நட்பினையே செய்தல் வேண்டும். உலகத்தோடு பொருந்துதல் இல்லாதவரது நட்பினை அவர் வேண்டிய தொன்றனைக் கொடுத்தாயினும் விட்டு விலகுதல் வேண்டும்.