பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அங்க இயல்159



பொருட்பால் அங்க இயல் 161 81. பழைமை (நீண்டநாள் பழகிய நண்பரின் பிழைகளைப் பொறுத்தல்) 1. பழைமை எனப்படுவது யாது.எனின் யாதும் கிழமையைக் கீழந்திடா நட்பு. 801 பழைமை என்று சொல்லப்படுவது யாது என்றால் பழைய நண்பர்கள் உரிமையால் செய்தவைகளைச் சிறிதேனும் நீக்காமல் அப்படியே உடன்படும் நட்பாகும். 2. நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்று.அதற்கு உப்பாதல் சான்றோர் கடன். 802 நட்பினுக்கு உறுப்புக்களானவை யாவை என்றால் நண்பர்கள் உரிமையால் செய்வனவேயாகும்.அந்த உரிமைக்கு உடன்பட்டு இனியவராதல் பெரியோர்களுக்கு முறையான கடமையாகும். 3. பழகிய நட்பு எவன்செய்யும் கெழுதகைமை செய்தாங்கு அமையாக் கடை. 803 நட்பினர் உரிமையால் செய்தவைகளைத் தாமே செய்ததுபோல் உடன்படாராயின் பழைமையால் வந்த நட்பு என்ன பயனைச் செய்யும்? 4. விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையான் கேளாது நட்டார் செயின். ' 804 நண்பர்கள் பழகிய உரிமையால் தம்மைக் கேளாமலேயே தமது காரியத்தைச் செய்வாராயின் அச்செயல் விரும்பப்படும் தன்மையுடையதாதலால் நண்பர்கள் அதற்கு உடன்பட்டு விரும்பி இருப்பார்கள். 5. பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுஉணர்க நோதக்க நட்டார் செயின். 805 நண்பர்கள் நாம் வெறுக்கத்தக்கனவற்றைச் செய்வாரானால் அதற்குக் காரணம் ஒன்று அறியாமையாக இருக்கவேண்டும்; அல்லது மிகுதியான உரிமையினால் இருத்தல் வேண்டும்.