பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

160



திருக்குறளார் தெளிவுரை 162 (). எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. 806 நட்பு ஆகிய வரம்பினைத் தாண்டாமல் அதன் கண்ணே. நின்றவர்கள், தம்முடன் பழைமையான தன்மையில் மாறாமல் வந்தவரது நட்பினை அவரால் கெடுதிவந்த போதும் விடமாட்டர்கள். . அழிவந்த செய்யினும் அன்புஅறார் அன்பின் வழிவந்த கேண்மை யவர். 807 பழைமையாய் வந்த நட்பினை உடையவர்கள் தமக்கு அழிவு வருவனவற்றை நண்பர்கள் செய்தாலும் அவர்களிடம் கொண்டுள்ள அன்பிலிருந்து நீங்க மாட்டார்கள். கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாள் இழுக்கம் நட்டார் செயின் 808 நண்பர்கள் செய்த பிழையினைத் தாமேயல்லாமல் பிறர் சொன்னாலும் கொள்ளாத உரிமையறிய வல்லவர்களுக்கு அந்த நண்பர்கள் பிழைசெய்த நாள் பயன்பட்ட நாளாகும். . கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு 809 உரிமை அற்றுப்போகாமல் பழையதாய் வந்த நட்புடையவரது, நட்பினை அவர் பிழை நோக்கியும் விடாதிருப்பவர்களை உலகம் அந்த நட்புக் குறித்து விரும்பும். * விழையார் விழையப் படுப பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தார். 81 C பழமையாய் வந்த நண்பர்கள் பிழை செய்தாலும் தம் பண்பினால் அவர்களை விட்டு நீங்காதவர்கள், பகைவர்களாலும் விரும்பப்படுவார்கள்.