பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அங்க இயல்161



பொருட்பால் அங்க இயல் 163 82. தீ நட்பு (தீய குணமுடையவர்களுடைய நட்பு) 1. பருகுவார் போலினும் பண்பு இலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது. 813 அன்பு மிகுதியால் நீரைப் பருகுவது போலப் பழகினாலும், தீய குணமுடையவர்களின் நட்பு வளர்வதைவிட தேய்வதே நல்லதாகும். 2. உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பு:இலார் கேண்மை பெறினும் இழப்பினும் என். 812 தமக்குப் பயன் உள்ளவரைக்கும் நட்பினைச் செய்து பயனில்லாத போது நீங்கிவிடும் தீயவர்களின் நட்பினைப் பெற்றிருந்தால்தான் என்ன பயன்? இழந்தால்தான் என்ன பயன்? 3. உறுவது சீர்துக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர். 813 நட்பினைக் கருதாமல் நட்பினால் வரும் பயனைக் கருதுவோரும், கொடுப்பாரைக் கருதாமல் பணத்தின் அளவைக் காணும் பொது மகளிரும், பிறர் கேடு நோக்காமல் அவரது சோர்வினைப் பார்க்கும் கள்வரும் ஒரே தன்மையராவர். 4. அமரகத்து ஆற்றுஅறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை. 814 முன்பெல்லாம் தாங்கிக்கொண்டிருந்து போர்க்களத்தில் வீழ்த்திவிட்டுப் போகும் கல்லாத குதிரையைப் போன்றவர்களுடைய நட்பினைவிடத் தனிமையாக இருப்பதே சிறப்பு உடையதாகும். 5. செய்துஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை எய்தலின் எய்தாமை நன்று. 815 நன்மை நிற்குமாறு செய்துவைத்தாலும், பாதுகாப்பு ஆகாத கீழ்மையானவர்களின் தீய நட்பானது உண்டாவதைவிட உண்டாகாமல் இருப்பதே நல்லதாகும்.