பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

162



திருக்குறளார் தெளிவுரை 164 10. . பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் ஏதின்மை கோடி உறும். 816 அறிவில்லாத பேதையினுடைய மிக நெருங்கிய நட்பினைவிட அறிவுடையவர்களது பகைமை கோடி மடங்கு நல்லதாகும். . நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் பத்துஅடுத்த கோடி உறும். 81了 அறிய வேண்டியதை அறியாமல் எப்போதும் நகைத்துக் கெண்டு மட்டும் இருக்கின்ற நட்பினால் வருவதைவிடப் பகைவரால் வருவது பத்துக் கோடி மடங்கு நல்லதாகும். . ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல் 818 தம்மால் செய்து முடிக்கக் கூடிய செயல்களையும் முடியாததென்று இருப்பவர்களுடன் கொண்ட நட்பினைக் கண்டால் சொல்லாமலேயே கைவிடுதல் வேண்டும். . கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு. 819 செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் இருப்பவர்களுடைய நட்பானது கனவில்கூடத் துன்பத்தினைத் தருவதாகும். எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு. 820 தனித்து வீட்டிலிருக்கும்போது நெருங்கிய நட்புடன் பழகி, பலர் கூடியிருக்கும் மன்றத்தில் பழித்துப் பேசுவோர் நட்புச் சிறிதளவேனும் தம்மைச் சாராமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். -