பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அங்க இயல்163



பொருட்டால் அங்க இயல் 165 83. கூடா நட்பு (மனத்தால் கூடாமல் இருக்கும் பகைவர் நட்பு) 1. சீர்இடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு, 824 மனத்தால் கூடாதிருந்து தீமையினைச் செய்வதற்குத் தக்க நேரம் வரும் வரையில் நட்பினர்போலப் பழகும் நட்பு, வாய்க்குமிடம் கண்டால் நன்றாக எறிதற்குத் துணையான பட்டடை போன்றதாகும். 2. இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும். 822 உற்றார் போன்று காட்டித் தமக்கு இனமல்லாதவர்களுடைய நட்பு இடம் பெற்றால் பெண்பாலாருடைய மனம்போல வேறுபடும். 3. பலநல்ல கற்றக் கடைத்தும் மனம்நல்லர் ஆகுதல் மானார்க்கு அரிது. 823 நல்லனவாகிய பலநூல்களைக் கற்றிருந்த போதும், பகைமை உள்ளம் படைத்தவர்களுக்கு அவைகளினால் மனம் திருந்தி நட்பாதல் இல்லை. 4. முகத்தின் இனிய நகாஅ அகத்துஇன்னா வஞ்சரை அஞ்சப் படும். 824 கண்டபொழுது முகத்தால் இனிதாகச் சிரித்து எப்போதும் மனத்தால் தீயவர்களான வஞ்சகர்களைப் பார்த்து நாம் அஞ்சுதல்வேண்டும். 5. மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் சொல்லினால் தேறல்பாற் றன்று. 825 மனத்தினால் தம்முடன் பொருந்துதல் இல்லாதவர்களை எவ்விதமான செயலிலும் சொல்லினால் தெரிந்து கொள்ளும் முறையானது கூடாது என்பதாம்.