பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

164



திருக்குறளார் தெளிவுரை 166 10. நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும். 826 நண்பர்கள் போல நன்மை பயக்கும் சொற்களைச் சொன்னாலும் பகைவர்களுடைய சொற்கள் சொல்லிய அப்பொழுதே அறிந்து கொள்ளப்படும். சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான். , 827 வில் வளைகின்ற வணக்கமானது தீமை செய்ததைக் குறித்தமையால் பகைவர்களிட்ம் உண்டாகின்ற சொற்களின் வணக்கத்தினையும் தீமையுண்டாக்குவதாகவே கொள்ளுதல் வேண்டும். தொழுதகை யுள்ளும் படைஒடுங்கும் ஒன்னார் அழுதகண் ணிரும் அனைத்து. 828 பகைவர்கள் தொழுத கையினுள்ளும் படைக்கலம் மறைந்திருக்கும். அப்பகைவர் அழுத கண்ணீரும் அவ்வாறே அது மறைந்திருப்பதற்கு இடமானதாகும். மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச் செய்து நட்பினுள் சாப்புல்லற் பாற்று. 829 பகைமையுள்ள மனம் தெரியாதபடி வெளிப்புறத்திலே நட்பினை மிகுதியாகச் செய்துகாட்டி, உள்ளத்தில் தம்மை இகழும் பகைவரை, தாமும் அவர் போலவே நட்பினைச் செய்து அந்நட்பு சாகுமாறு செய்தல் வேண்டும். பகைநட்பாம் காலம் வருங்கால் முகம்நட்டு அகநட்பு ஒரீஇ விடல். - 830 பகைவர்கள் தம்மிடம் நண்பராக நடந்து கொள்ளுகின்ற காலம் வந்தபோது அவர்களுடன் முகத்தினால் மட்டும் நட்பினைச் செய்து மனத்தினால் அவர்கள் நட்பினைத் தவிர்த்தல் வேண்டும்.