பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அங்க இயல்165



பொருட்பால் அங்க இயல் 167 84. பேதைமை (அறிவிலிகளின் அறியாமைக் குணம்) 1. பேதைமை என்பதுஒன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல். 831 பேதைமை என்று சொல்லப்படுவது எல்லாக் குற்றங்களிலும் மிக்கதாகும். அது யாதென்று கேட்டால், தமக்குக் கெடுதி உண்டாக்குவதைக் கைக்கொண்டு ஆக்கம் தருவதை விட்டுவிடுவதாகும். 2. பேதைமை யுள்ளல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கண் செயல் 832 பேதைமைகளுக்கெல்லாம் மிகுந்த பேதைமை என்னவென்றால், தன்னால் முடியாத செயல்களில் மிக்க விருப்பத்தினைக் கொண்டு செய்தலாகும். 3. நானாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில். 833 நாணவேண்டுவனவற்றிற்கு நாணம் கொள்ளாமையும். நாட வேண்டுவனவற்றை நாடாமையும், யாவரிடத்தும் அன்பில்லாமையும், விரும்ப வேண்டுவனவற்றை விரும்பாமையும் பேதையினுடைய தொழில்களாகும். 4. ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான்அடங்காப் பேதையின் பேதையார் இல். 834 நல்ல நூல்களைக் கற்றிருந்தும் அதன் பொருளினை உணர்ந்திருந்தும் மற்றவர்களுக்கு எடுத்துக் கூறியும் தான் அடங்கி நடக்காத பேதையைப் போலப் பேதையார் உலகத்தில் இல்லை. - 5. ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக்கு அழுந்தும் அளறு. 835 பேதையானவன் வருகின்ற பிறவிகளில் எல்லாம் தான் புகுந்து துய்க்கின்ற துன்பத்தினை இந்த ஒரு பிறவியிலேயே செய்து கொள்ளுவான்.