பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

166



திருக்குறளார் தெளிவுரை I68 10. பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைழேற் கொளின். 838 செய்யும் முறையறியாத பேதை ஒரு காரியத்தை மேற்கொண்டால் அக்காரியமும் கெடும்; அவனும் தானே தளை பூணுகின்ற நிலைமையினையும் அடைவான். ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை. 837 பேதையானவன் பெரிய செல்வத்தினைப் பெற்றுவிட்டால்தன்னோடு யாதொரு தொடர்பும் இல்லாதவர்கள் பயனடைவார்கள். எல்லாத் தொடர்பும் கொண்ட சுற்றத்தார் பசித்திருப்பர். மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் கைஒன்று உடைமை பெறின். 838 தன்னிடம் ஒன்றை உடையவனாகப் பெற்றிருக்கும் பேதையானவன் மயக்கம் அடைவது எப்படிப்பட்டதென்றால், முன்னேயே பித்துப் பிடித்தவன் மதுவுண்டு மயங்குவது போன்றதாகும். . பெரிதுஇனிது பேதையார் கேண்மை ിങ്ങ് பீழை தருவது.ஒன்று இல். 839 பிரிந்து போகின்ற காலம் வரும்போது துன்பம் ஒன்றும் இல்லையாதலால் பேதையானவர்களுடன் நட்புக் கொள்ளுதல் மிகவும் இனிமையானதாகும். கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். 840 சான்றோர் நிறைந்திருக்கும் அவையில் பேதையானவன் நுழைதல், இன்பம் தரும் அமளிக்கண் தூய்மை அல்லாதவற்றை மிதித்த காலினை வைத்தது போன்றதாகும்.