பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அங்க இயல்167



பொருட்பால் அங்க இயல் 169 85. புல்லறிவாண்மை (அற்ப அறிவுள்ளவன் தன்னைச் சிறந்த அறிஞனாக எண்ணி நடத்தல்) அறிவுஇன்மை இன்மையுள் இன்மை பிறிதுஇன்மை இன்மையா வையாது உலகு. 841 ஒருவனுக்கு இல்லாமை பலவற்றுள்ளும் மிக்க இல்லாமை அறிவில்லாமையேயாகும். மற்றைப் பொருளில்லாமையோ என்றால் அதனை இல்லாமையாக உலகத்தார் கொள்ளமாட்டார்கள். அறிவிலான் நெஞ்சுஉவந்து ஈதல் பிறிதுயாதும் இல்லை பெறுவான் தவம். 842 புல்லறிவாளனானவன் ஒருவனுக்கு மனமுவந்து ஒன்று கொடுப்பானேயானால் அதற்குக் காரணம் பெறுகின்றவனுடைய நல்வினையே அல்லாமல் வேறொன்றுமில்லையாகும். . அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பிழை செறுவார்க்கும் செய்தல் அரிது. 843 புல்லறிவுடையவர்கள் தமக்குத்தாமே உண்டாக்கிக் கொள்ளும் துன்பம் அவர்களுடைய பகைவர்களும் அவர்களுக்கு செய்ய முடியாததாகும். . வெண்மை எனப்படுவது யாது.எனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு. 844 புல்லறிவுடைமை என்பது யாது என்று கேட்டால், அது தம்மைத் தாமே யாம் நல்லறிவுடையோம் என்று நன்கு மதித்துக் கொள்ளும் மயக்கமேயாகும். கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடுஅற வல்லது உம் ஐயம் தரும். 845 புல்லறிவுடையவர்கள் தாம் கற்றறியாத நூல்களையும் கற்றவர்களாகச் சொல்லிக்கொண்டு நடத்தில், அவர்கள் குற்றமறக் கற்றதொரு நூலுண்டாயின், அதனிடத்தும் மற்றவர்களுக்கு ஐயத்தினை உண்டாக்கும்.