பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

168



選} திருக்குறள் "த்ெளிவுரை 170 10. . அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி. 846 புல்லறிவாளர்கள் தம்மிடத்தில் நிகழும் குற்றங்களை நீக்காவிட்டால், ஆடைகளினால் மறைக்க வேண்டிய உறுப்புக்களை மறைத்தலும் அற்ப அறிவேயாகும். . அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு. 847 பெறுதற்கரிய மறை மொழிப் பொருள்களைக் கற்றாலும், அதனை மனத்திற் கொள்ளாமல் போக்கும் புல்லறிவாளன், அறியாமையால் தனக்குத்தானே மிகுந்த வருத்தத்தினைச் செய்து கொள்ளுவான். ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவும்ஒர் நோய். 848 புல்லறிவாளன் அறிவுடையவர்கள் சொல்லியபடியும் செய்யமாட்டான். தானாகவும் செய்வனவற்றை அறியான். அவன் உயிர் நீங்கும் வரை இது அவனுக்கு ஒரு நோயாகும். காணாதாற் காட்டுவான் தான்கானான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு, 849 தன்னை எல்லாம் அறிந்தவனாக் மதித்தலால்பிறர் அவனுக்கு அறிவிக்கப் புகுந்தால் அவனால் பழிக்கப்படுவதுடன் அப்படிச் சொல்லப் போனவன் ஒன்றும் அறியாதவனாக முடிவான். இனி அறியும் தன்மை இல்லாத அவன் தான் அறிந்தபடியே அறிந்தவனாகச் செய்து கொள்ளுவான். உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான் வையத்து அலகையா வைக்கப் படும், 85C உலகில் அறிந்தோர் பலரும் உண்டு என்பதைப் புல்லறிவாளன் இல்லையென்று சொல்லுவான். அவன் மகன் என்று கருதப்படான். உலகில் சொல்லப்படுவதோர் பேய் என்று கருதப் படுவான். s