பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அங்க இயல்169



பொருட்பால் அங்க இயல் 171 1. 86. இகல் (பகைமை உள்ளத்தால் உண்டாகும் மனவேறுபாடு) இகல்என்ட எல்லா உயிர்க்கும் பகல்என்னும் பண்புஇன்மை பாரிக்கும் நோய். 851 எல்லா உயிர்களுக்கும், மற்ற உயிர்களோடு சேராமை என்கின்ற தீக்குணத்தினை வளர்க்கின்ற குற்றத்தினை இகல் என்று சொல்லுவர் நூலோர். 2. பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி இன்னாசெய் யாமை தலை. 852 தம்முடன் கூடாமை கருதி ஒருவன் வெறுப்பன செய்தாலும், அவனுடன் மாறுபடுதலைக் கருதித் தாம் அவனுக்குத் துன்பம் செய்யாதிருத்தல் உயர்ந்த பண்பாகும். 3. இகல்என்னும் எவ்வநோய் நீக்கின் தவல்இல்லாத் தாவில் விளக்கம் தரும். 853 மாறுபாடு என்கின்ற துன்பம் செய்யும் நோயினை ஒருவன் நீக்கி விடுவானாகில், அவனுக்கு அது எப்போதும் இருப்பதற்குக் காரணமான புகழினைக் கொடுக்கும். 4. இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல்என்னும் துன்பத்துள் துன்பம் கெடின். 854 மாறுபாடு என்கின்ற துன்பங்களுக்கெல்லாம் துன்பமான ஒன்று இல்லையென்றால், அது அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றிலும் மிக்க இன்பத்தினைக் கொடுக்கும். 5. இகல்னதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிகல்ஊக்கும் தன்மை யவர். 855 மனத்தில் மாறுபாடு தோன்றியபோது அதனை எதிர்த்து நடந்து கொள்ளும் வல்லவர்களை வெல்லக்கருதும் தன்மையுடையவர்கள் யாவர்?