பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

170



திருக்குறளார் தெளிவுரை 172 6, {{}. இகலின் மிகல்இனிது என்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து. 858 பிறருடன் மாறுபாடு கொள்வதில் தனக்கு இனிமையென்று கருதி அதனைச் செய்வானது உயிர் வாழ்க்கை துன்பப் படுதலும் கெடுதலும் சிறிதுபொழுதில் நடப்பனவாகும். மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் இன்னா அறிவி னவர். 357 இகலோடு சேர்ந்து ஒழுகுகின்ற துன்பமான அறிவினையுடையார் வெற்றியினைத் தருகின்ற நீதி நூற்பொருள்களை அறிந்து கொள்ள மாட்டார்கள். . இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை மிகல்ஊக்கின் ஊக்குமாம் கேடு. 858 மனத்தில் மாறுபாடு தோன்றியபோது அதனை நீக்குதல் ஒருவனுக்கு ஆக்கம் தரும். அதனைச் செய்யாமல் அதனை மேற்கொள்ளுவானானால் கேடும் தனக்கு வந்து சேரும். . இகல்கானான் ஆக்கம் வருங்கால் அதனை மிகல்கானும் கேடு தரற்கு. 35{ தனக்கு ஆக்கம் உண்டான காலத்தில் இகல் என்பதனை நினையாதான், தனக்குக்கேடு செய்வதற்கு இகலின்கண் மிகுந்து நிற்பான். இகலான்ஆம் இன்னாத எல்லாம் நகலான்ஆம் நன்னயம் என்னும் செருக்கு. 866 ஒருவனுக்கு மாறுபாடு என்னும் இகல் ஒன்றினாலே துன்பமானவைகள் எல்லாம் உண்டாகும். நட்பு என்ற ஒன்றினாலேயே நல்ல நீதி என்ற பெருஞ்செல்வம் உண்டாகும்.