பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அங்க இயல்171



பொருட்பால் அங்க இயல் 173 5. 87. பகை மாட்சி (அறிவின்மையால் பகையினை மாட்சிமைப் படுத்துதல்) . வலியார்க்கு மாறுஏற்றல் ஒம்புக ஒம்பா மெலியார்மேல் மேக பகை. 861 தம்மைவிட வலிமையுடையவர்களிடத்தில் பகையாய் இருப்பதை நீக்குதல் வேண்டும். தம்மைவிட மெலியார்களுக்குப் பகையாய் இருப்பதை ஒழியாமல் விரும்புதல் வேண்டும். . அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான் என்பரியும் ஏதிலான் துப்பு. 832 ஒருவன் தனது கற்றத்தின் மீது அன்பில்லாமலும், வலிமையான துணையில்லாமலும், தானும் வலிமையில்லாமலும் இருப்பானானால் தன்மீது வந்த பகைவன் வலியினை எவ்வாறு தொலைப்பான்? அஞ்சும் அறியான் அமைவுஇலன் ஈகலான் தஞ்சம் எளியன் பகைக்கு. 863 ஒருவன் அஞ்ச வேண்டாததற்கு அஞ்சுபவனாகவும், அறிய வேண்டுவனவற்றை அறியாதவனாகவும், பிறரோடு பொருந்துதல் இல்லாதவனாகவும். இருப்பானேயானால் யாரிடத்தும் மிகவும் எளிமையானவன் ஆவான். . நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது. 864 ஒருவன் கோபத்தினின்று நீங்காதவனாயும். நிறைகுணம் இல்லாதவனாயும் இருப்பானானால் அவன்மேல் பகை செல்லுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் எளிமையானதாகும். வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்பிலன் பற்றார்க்கு இனிது. 865 ஒருவன் நீதி நூல்களைக் கற்காமலும், அவை விதித்த நெறிமுறைகளைச் செய்யாமலும் தனக்கு வரும் பழிகளைப் பாராமலும் தான் பண்புடையவன் அல்லாமலும் இருந்தால் அவனுடைய பகைவர்க்கு அவனது பகைமை இனிதாகும்.