பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

172



திருக்குறளார் தெளிவுரை 174 தாணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் பேணாமை பேணப் படும். 866 தன்னையும் பிறனையும் அறிந்துகொள்ளமுடியாத பெருங். கோபத்தினைக் கொண்டவனும் மிகுந்து வளரும் காமத்தினையும் உடையவன் எவனோ அவனுடைய பகைமையினைப் பகைவர்கள் விரும்பிக் கொள்ளுவார்கள். கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்துஇருந்து மாணாத செய்வான் பகை. 867 தொழிலினைத் தொடங்கியபின் அதற்குப் பொருந்தாதனவற்றைச் செய்பவனுடைய பகைமையைச் சில பொருள் கொடுத்தாயினும் கொள்ளுதல் ஒருதலையாக வேண்டும். குனன்இலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு இனன்இலனாம் ஏமாப்பு உடைத்து. 868 ஒருவன் நற்குணம் ஒன்றும் இல்லாதவனாகிக் குற்றங்கள் பலவாகியபோது அவன் யாதொரு துணையும் இல்லாதவனாவான்.அதனால் அவன் பகைவர்க்கு எளியவனாவான். . செறுவார்க்குச் சேண்இகவா இன்பம் அறிவுஇலா அஞ்சும் பகைவர்ப் பெறின். 869 நீதியை அறிந்திராத அஞ்சுகிற பகைவரைப் பெற்றால் அவரை வெல்லுபவர்களுக்கு உயர்வான இன்பங்கள் நீங்காமல் இருக்குமாம். . கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் ஒல்லானை ஒல்லாது ஒளி. 870 நீதி நூல்களைக் கல்லாதவனோடு பகைத்தலால் வருகின்ற எளிய பொருள்களை மேற்கொள்ளாதவனை எக்காலத்திலும் புகழ் வந்து சேராது.