பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அங்க இயல்173



பொருட்பால் அங்க இயல் 175 88. பகைத்திறம் தெரிதல் (பகைவர்களை ஆராய்ந்தறிந்து நடந்துகொள்ளுதல்) 1. பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டிற்பாற் றன்று. 871 பகையென்று சொல்லப்படும் தீமை பயப்பது ஒருவன் விளையாட்டிற்காகவும் கூட விரும்புகின்ற தன்மையுடையதன்று. 2. வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை. 872 ஒருவன் வில்லினை ஏராகவுடைய உழவரோடு பகைகெண்டானாயினும், சொல்லினை ஏராகவுடைய உழவரோடு பகை கொள்ளாதிருத்தல் வேண்டும். 3. ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன். 873 தான் தனியனாக இருந்து பலருடன் பகைகொள்ளுபவன் பித்துப் பிடித்தவர்களைவிட அறிவில்லாதவனாவான். 4. பகைநட்பாக் கொண்டுஒழுகும் பண்புடை யாளன் தகைமைக்கண் தங்கிற்று உலகு. 874 வேண்டியபோது பகையினையும் நட்பாகவே கொண்டு நடந்து கொள்ளுகின்ற தன்மையுடைய மன்னனது சிறப்பினுள்ளே உலகமானது அடங்கி இருப்பதாகும். 5. தன்துணை இன்றால் பகைஇரண்டால் தான்.ஒருவன் இன்துணையாக் கொள்கஅவற்றின் ஒன்று. 875 தனக்கு உதவியாக இருக்கும் துணை இல்லாமல், துன்பம் கொடுக்கும் பகை இரண்டாக இருந்தால் ஒருவனாக இருக்கும்தான் அப்பகை இரண்டினுள் பொருத்தமான ஒன்றினை அப்போதைக்கு இனிய துணையாகச்செய்து கொள்ளவேண்டும்.