பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

174



திருக்குறளார் தெளிவுரை I?6 6. 10. தேறினும் தேறா விடினும் அழிவின்கண் தேறான் பகாஅள் விடல். 876 பகைவனை முன்பு தெளிந்து அறிந்து இருந்தாலும் அல்லது தெளிந்து அறியாமல் இருந்தாலும் தனக்கு அழிவு வந்துற்றபோது அப்பகைவனைக் கூடாமலும் நீக்கிவைக்காமலும் இடையே விட்டுவைக்க வேண்டும். . நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க மென்மை பகைவர் அகத்து. 877 தான் நொந்திருப்பதனைத் தாமாக அறியாதவர்களுக்குச் சொல்லாதிருத்தல் வேண்டும். தனது வலிமையினைப் பார்த்திருக்கும் பகைவரிடத்தில் மேலிட்டுக் கொள்ளாதிருத்தல்வேண்டும். வகைஅறிந்து தன்செய்து தன்காப்ப மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு. 878 தான் தொழில்செய்யும் வகையினை அறிந்து அது முடித்தற்கேற்றபடி தன்னைப் பெருக்கிக் காத்துக் கொண்டால் தனது பகைவரிடத்தில் உள்ள செருக்கு கெட்டுவிடும். . இளைதாக முள்மரங் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து. 879 களைய வேண்டிய முள் மரத்தினை இளையதாக இருக்கும் போதே களைந்து விடுதல் வேண்டும். அப்படிச்செய்யாவிட்டால் முதிர்ந்தபோது களைபவர்கள் கையினை அது தானே கெடுக்கும். உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார். 880 தம்முடன் பகைப்பவரது தருக்கினைக் கெடுக்கக் கூடியவராய் இருந்து. இகழ்ச்சியால் அது செய்யாத அரசர், பிறகு மூச்சுவிடும் அளவிற்கும் உயிருடன் இருப்பவராக மாட்டார்.