பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அங்க இயல்175



பொருட்பால் அங்க இயல் 177 89. உட்பகை (உடனிருந்துகொண்டே தீமை செய்யும் பகைவர்கள்) 1 நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின். 88.1 நிழலும் நீரும் முன்னர் இனியவைபோல் இருந்தாலும் பின்னர் நோய் செய்வனவாகும். அதுபோல உட்பகையினர் முன்னர் இனியவரேயானாலும் பின்னர் தீங்கு பயப்பவராவார்கள். வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு. 882 வாள்போல, வெளிப்பட்டு நிற்கும் பகைவர்களுடைய பகைமைக்கு அஞ்சாதிருத்தல் வேண்டும். உறவு போலவே மறைந்து நிற்கும் பகைவர்களின் நட்பினை அஞ்சுதல் வேண்டும். உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும். 883 உட்பகைக்கு அஞ்சித் தன்னைக் காத்துக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், குயவன் மட்கலத்தினை அறுக்கும் கருவிபோல மறைவாக இருந்தே கெடுத்துவிடுவர். . மனம்மானா உட்பகை தோன்றின் இனம்மாணா ஏதம் பலவும் தரும். 884 புறத்தில் திருந்தியதுபோல இருந்து உள்ளுக்குள்ளே திருந்தாத உட்பகை உண்டா விட்டால் அது அவனுக்குத் தனது கற்றத்தார் தனது வசப்படாமைக்குக் காரணமான குற்றம் பலவற்றையும் கொடுக்கும். உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் ஏதம் பலவும் தரும், 885 புறத்தில் உறவு முறைத் தன்மையோடு கூடிய உட்பகை வேந்தனுக்கு உண்டாகிவிட்டால், அது அவனுக்கு இறத்தல் முதலிய குற்றங்களையெல்லாம் தந்துவிடும்.