பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

176



திருக்குறளார் தெளிவுரை 178 10. ஒன்றாமை ஒன்றியார் கண்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது. 888 L16)&హxt) தனக்கு உள்ளாயினாரிடத்திலேயே உண்டாகிவிடுமானால் அரசனுக்கு இறவாமை என்பது முடியாததாகிவிடும். செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி. 887 செப்பு ஒன்றுகூடி இருப்பதுபோல் புறத்தில் வேற்றுமை தெரியாமல் கூடினாராயினும் உட்பகை உண்டான குடியிலுள்ளவர்கள் மனத்தால் தம்முள் கூடமாட்டார்கள். . அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை உற்ற குடி. 888 உட்பகை உண்டாகியிருக்கும் குடியானது அரத்தினால் தேய்க்கப்பட்ட இரும்பினைப் போலத் தேய்க்கப்பட்டுத் தனது வலிமை தேய்ந்து விடுவதாகும். எட்டகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாம் கேடு. 889 உட்பகை எள்ளின் அளவுபோன்று சிறுமையுடையதே ஆனாலும், பெருமையெல்லாம் அழிக்கக் கூடிய கேடு அதனுள்ளே இருப்பதாகும். உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடன்உறைந் தற்று. 890 உள்ளத்தில் பொருத்தம் இல்லாதவரோடு கூடிவாழும் வாழ்க்கை ஒரு குடிசையினுள்ளே பாம்புடன் கூடி வாழ்வதைப் போன்றதாகும்.