பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

178



திருக்குறளார் தெளிவுரை I4] 6. குறிப்பு:அறிந்து காலம் கருதி வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல், £36 அரசனுடைய குறிப்பினை எப்போதும் புரிந்துகொண்டு சொல்லுதற்கேற்ற காலத்தினையறிந்து வெறுப்பிலாதனவும் விரும்பதற்குரிய செயல்களை அவன் மனம் விரும்பம் வகையிலும் சொல்லுதல் வேண்டும். - . வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல். 337 அரசன் விரும்புவனவும், பெரிய பயனுள்ளவையுமானவற்றை அவன் கேட்டிலனாயினும் சொல்ல வேண்டும்; எப்போதும் பயனில்லாதவற்றை அரசன் தானே கேட்டாலும் சொல்லாதிருக்க வேண்டும். இளையர் இனமுறையர் என்றுஇகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும். §§§ இவர் நமக்கு இளையவர் என்றும், இன்ன முறையில் இனத்தவர் என்றும், அரசரை அவமதிக்காமல் அவ்வரசருக்குள்ள உயர்ந்த நிலைமைக்குப் பொருந்த அமைச்சரானவர் நடந்து கொள்ளுதல் வேண்டும். கொளப்பட்டேம் என்றுஎண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்குஅற்ற காட்சி பவர். §99 நிலைபெற்ற அறிவினையுடையவர்கள். அரசனால் நாம் நன்கு மதிக்கப்பட்டுள்ளோம் என்று சுருதி அவன் விரும்பாதவற்றைச் செய்ய மாட்டார்கள். . பழையம் எனக்கருதிப் பண்புஅல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும். 700 அரசனுக்கு யாம் பழையவர்கள் என்று கருதித் தமக்கு இயல்பில்லாதவற்றைச் செய்யும் உரிமை அமைச்சர்க்குக் கேட்டினைப் பயப்பதாகும்.