பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அங்க இயல்181



பொருட்பால் அங்க இயல் 183 92. வரைவின் மகளிர் (ஆவார், ஆகாதார் என்ற வரையில்லாத பொதுமகளிர்) 1. அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும். 91.3 ஒருவனை அன்புபற்றி விரும்பாமல் பொருள் பற்றி விரும்புகிற மகளிருடைய இனிய சொற்கள் துன்பத்தினைக் கொடுக்கும். - 2. பயன்தூக்கிப் பண்புஉரைக்கும் பண்புஇல் மகளிர் நயன்துக்கி நள்ளா விடல் 9囊2 ஒருவனுக்கு உள்ள பொருளை அளந்தறிந்து அதனை அடையும் வரையில் பண்புடைமை பேசும் பண்பில்லாத மகளிரது நடத்தையினை ஆராய்ந்தறிந்து அவர்களைப் பொருந்தாது விடுதல் வேண்டும். 3. பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் ஏதில் பிணந்தழிஇ யற்று. 913 பொருளையே விரும்பும்பொது மகளிரது பொம்ய்மையுடைய முயக்கம் பிணம் தூக்குவோர் இருட்டறையொன்றில் முன்னறியாத பிணத்தினைத் தழுவினது போன்றதாகும். 4. பொருட்பொருளார் புன்னலம் தோயார் அருட்பொருள் ஆயும் அறிவி னவர். 914 அருளோடு கூடிய பொருளை ஆராயும் அறிவினையுடையார் இன்பமாகிய பொருளை இழந்து பொருளாகிய பொருளையே விரும்பும் மகளிரது அற்ப இன்பத்தினைத் தீண்டமாட்டார்கள். 5. பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின் மாண்ட அறிவி னவர். 915 இயற்கையான மதி நன்மையினால் மாட்சிமைப்பட்டு செயற்கை அறிவினையும் உடையவர்கள், பொருள் கொடுப்பார்க்கெல்லாம் பொதுவான ஆசையுடைய மகளிரது புல்லிய நலத்தினைத் தீண்டார்கள்.