பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அங்க இயல்183



பொருட்பால் அங்க இயல் 185 93. கள் உண்ணாமை (கள்ளினை உட்கொள்ளாதிருத்தல்) 1. உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார். 921 கள்ளின் மீது காதல் கொண்டு ஒழுகுபவர்கள் எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்பட மாட்டார்கள். அதுவேயல்லாமல் தங்கள் புகழினையும் இழப்பர். 2. உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரால் எண்ணப் படவேண்டா தார். 922 அறிவுடையோர்கள் கள்ளினை உண்ணாதிருக்கக் கடவர். நல்லவர்களால் மதிக்கப்பட விரும்பாதவர்கள் உண்ணுவார்களாக என்பதாம். 3. ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி. 923 பெற்ற தாயின் முன்பும் கள்ளுண்டு களித்தல் துன்பமாகும். அப்படியானால், குற்றத்தினைப் பொறுத்துக் கொள்ள முடியாத சான்றோர் முன்பு கள்ளுண்டு களித்தல் என்னவாகும்? . 4. நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளன்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. 924 கள்குடித்தல் என்று சொல்லப்படுகின்ற மிக்க குற்றத்திளையுடையாரை, நாண் என்று சொல்லப்படுகின்ற மிக்க உயர்ந்தவள் விட்டு நீங்குவாள். 5. கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல். 925 பொருள் கொடுத்து ஒருவன் கள்ளினால் தனக்கு மெய்ம்மறப்பினைத் தேடிக் கொள்ளுதல், செய்வது இன்னது என்ற அறியாமையினைக் காரணமாகக் கொண்டதாகும்.