பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

184



திருக்குறளார் தெளிவுரை 186 10. துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்டார் கள்.உண் பவர். 928 உறங்கினவர்கள் அந்த நேரத்தில் செத்தாரின் வேறாகக் கருதப்படமாட்டார்கள். அதுபோலக் கள்ளுண்போர் நஞ்சு உண்பவரினின்றும் வேறாகக் கருதப்பட மாட்டார்கள். உள்ஒற்றி உள்ளுர் நகப்படுவர் எஞ்ஞான்றும் கள்ஒற்றி கண்சாய் பவர். 927 கள்ளினை மறைந்துண்டு அக்களிப்பால் தம் அறிவு தளர்பவர் உள்ளுரில் வாழ்பவரால் உள்நிகழ்வது உய்த்துணரப்பட்டு எப்போதும் நகுதல் செய்யப்படுவார். . களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து ஒளித்தது உம் ஆங்கே மிகும். 928 கள்ளினை மறைந்துண்டு, உண்ணாதபோது 'யான் கள்ளுண்டறியேன்" என்று கூறுதலை நீக்குதல் வேண்டும். கள்ளுண்டபோது நெஞ்சத்தில் ஒளித்த குற்றமும் மிகுந்து வெளிப்பரவுவதாகும். . களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ யற்று. 929 கள்ளுண்டு களிப்பவனிடம் இது ஆகாது' என்று காரணங்காட்ட முற்படுதல், நீரினுள் முழ்கி ஒருவனை விளக்கினால் தேடுதல் ஒக்கும். கள்.உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. 930 கள்ளுண்டான் ஒருவன் தான் உண்ணாதிருந்தபோது கள்ளுண்டு களிப்பவன் நிலைமையினைக் கண்டு, தான் உண்டபோதும், இப்படித்தான் இருந்திருப்பான், என்று கருத மாட்டான் போலும். - -