பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அங்க இயல்185



பொருட்பால் அங்க இயல் 187 94. குது (சூதாட்டத்தின் தீமைகளும் விளைவுகளும்.) 1. வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதுாடம் துண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று. 934 தான் வெல்லும் ஆற்றல் உடையவனாக இருந்தாலும் சூதாடலை விரும்பாதிருத்தல் வேண்டும். வென்று பொருளீட்டினாலும் அது இரையில் மறைந்திருக்கும் தூண்டில் இரும்பினை இரையென எண்ணி மீன் விழுங்கியதாகும். 2. ஒன்றுஎய்தி நூறுஇழக்கும் சூதர்க்கு உண்டாங்கொல் நன்றுஎய்தி வாழ்வதோர் ஆறு. 932 ஒன்றனை முன்னர் வென்று பிறகு நூற்றினை இழக்கும் சூதர்க்குப் பொருளால் அறமும் இன்பமும் எய்தி வாழ்வதொரு வழி உணடாகுமோ? 3. உருள்ஆயம் ஒவாது கூறின் பொருள்ஆயம் போஒய்ப் புறமே படும். 933 உருளும் கவற்றின் (சூதாடும் கருவி) கண்பட்ட ஆயத்தினை ஓயாது சொல்லிச் சூதாடுவானானால் அவன் ஈட்டிய பொருளும் வருவாயும் அவனைவிட்டு நீங்கிப் பகைவரிடத்தே தங்கும். 4. சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூதின் வறுமை தருவது.ஒன்று இல், 934 தனக்குத் துன்பங்கள் பலவற்றையும் கொடுத்துப் புகழையும் கெடுக்கின்ற சூதினைப் போல வறுமையினைக் கொடுக்க வல்லது பிறிதொன்றும் இல்லையாகும். 5. கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார். 935 இருந்தும் இல்லாதவராயினார் யாரென்றால், சூதினையும் அது ஆடப்படும் இடத்தினையும் ஆடுதற்கேற்ற தொழிலினையும் மேற்கொண்டு கைவிடாதிருந்தவர்கள் ஆவார்கள். -