பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

186



திருக்குறளார் தெளிவுரை 188 40 அகடுஆரார் அல்லல் உழப்பர்சூது என்னும் முகடியான் மூடப்பட் டார். 936 குது என்று சொல்லப்படும் முகடியால் விழுங்கப்பட்டவர்கள் வயிறார உண்ணப் பெறார். துன்பத்திலேயே உழன்று கொண்டிருப்பார்கள். . பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின். 937 நற்பணி செய்யவேண்டிய காலமானது சூதாடும் இடத்தில் கழியுமானால் நெடுங்காலமாக வந்த செல்வத்தினையும் நற்குணங்களையும் அது அழிக்கும். . பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து அல்லல் உழப்பிக்கும் குது. 938 குதானது, பொருளையும் கெடுத்துப் பொய்யினை மேற்கொள்ளச் செய்து மனத்தில் எழுகின்ற அருளையும் கெடுத்துத் துன்பத்திலேயே உழல வைக்கும். உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும் அடையாவாம் ஆயம் கொளின். 939 சூதாட்டத்தினையே ஒருவன் விரும்பி மேற்கொள்ளுவானாகில் அவனிடத்தில் புகழும் கல்வியும் செல்வமும் ஊணும் ஆகிய இவ்வைந்தும் சேராவாம். இழத்தொறுஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறுஉம் காதற்று உயிர். 940 இழக்குந்தோறும் அச்சூதின் மேல் காதல் செய்யும் சூதனைப் போல உடம்பால் துன்பம் அனுபவிக்குந்தோறும் அதன்மேல் உயிர் காதலை உடைத்தாகும்.