பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அங்க இயல்187



பொருட்பால் அங்க இயல் 189 à. 95. மருந்து (பிணி தீர்க்கும் மருந்து பற்றியன கூறல்; . மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று. . 941 உணவும் செயல்களும் ஒருவடைய அளவுக்கு மிகுமாயினும் குறையுமாயினும் வாதம் முதலாகக் கூறப்பட்ட மூன்று நோயும் துன்பத்தைக் கொடுக்கும். மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின். 942 ஒருவன் தான் முன்னதாகஉண்ட உணவு அற்ற நிலையை (சீரணித்ததை) அறிந்து பின் உண்ணுவானானால் அவனுடைய உடம்புக்கு மருந்து என்று வேறு வேண்டாவாம். அற்றால் அளவறிந்து உண்க அஃதுஉடம்பு பெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு. 943 முன்பு உண்டது அற்றதையறிந்து பின்பு உண்பதைச் சீரணிக்கும் அளவறிந்து உண்ணுதல் வேண்டும். அப்படிச் செய்தால் அது உடம்பினை நெடுங்காலம் கொண்டு செலுத்தும் வழியாகும். அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து. 944 முன் உண்டது அற்றதையறிந்து, பிறகு நன்றாகப் பசித்து உண்ணுங்கால், தம்முள் மாறுபாடு இல்லாத உணவுகளைக் குறிக்கொண்டு உண்ணுதல் வேண்டும் மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துஉண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு. 945 மாறுபட்ட தன்மைகள் இல்லாத உணவினை மனம் விரும்பிய அளவு உண்ணாமல் அளவறிந்து உண்டானர்னால் அவன் உயிர்க்குப் பிணிகளால் துன்பம் விளைதல் உண்டாகாது.