பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

188



திருக்குறளார் தெளிவுரை 190 6. இழிவுஅறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபேர் இரையான்கண் நோய். 946 குறைவாக உண்பதை நல்லதென்று அறிந்து உண்பவனிடம் இன்பம் நீங்காமல் நிற்பதைப் போல, மிகப் பெரிய இரையை விழுங்குகிறவனிடம் நோய் நீங்காமல் நிலைத்து நிற்கும். 7. தீயள வன்றித் தெரியான் பெரிதுஉண்ணின் நோய்அள வின்றிப் படும். 947 பசியினளவும் சீரணிக்கும் அளவும் தெரியாதபடி மிகுதியாக உண்ணுவானேயானால் அவளிடத்தில் நோய்கள் எல்லையற்று வளரும். 8. நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். 948 மருத்துவன் குறிகளால் நோயினை இன்னதென்று அறிந்து, பின் அது வருதற்குக் காரணத்தினை ஆராய்ந்து அறிந்து அதனை நீக்கும் வழியினை அறிந்து அதனைச் செய்யும் முறை பிழையாமல் செய்தல் வேண்டும். 9.உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும் கற்றான் கருதிச் செயல். 949 மருத்துவ நூல்களைக் கற்ற மருத்துவன் நோயுற்றோன் அளவினையும், நோயின் அளவினையும், செய்தற்கு ஏற்ற காலத்தினையும் நூல் நெறியால் அறிந்து அவற்றோடு பொருந்தச் செய்தல் வேண்டும். 10. உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்று அப்பால்நாற் கூற்றே மருந்து. 950 பிணிக்கு மருந்தென்பது நோயுற்றவன், அதனைத் தீர்க்கும் மருத்துவன், மருந்து, அதனைப் பிழைபடாமற் செய்வோன் என்று சொல்லப்பட்ட நான்கு பகுதியினையுடையதாகும்.