பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

ஒழிபு இயல்189



பொருட்பால் ஒழிபு இயல் 191 96. குடிமை (உயர்ந்த நற்குடியில் பிறந்தாரது தன்மைகள்) 1. இற்பிறந்தார் கண்ணல்லது இல்லை இயல்பாகச் செப்பமும் நானும் ஒருங்கு. 951 நடுவு நிலைமையாகிய தன்மையும்.நாணம் என்பதும் ஒன்று சோந்து உயர்ந்த குடியில் பிறந்தார்களிடம் அல்லாமல் மற்றவர்களிடம் இயற்கையாகவே உண்டாகாது. 2. ஒழுக்கமும் வாய்மையும் நானும் இம்மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார். 952 ஒழுக்கமும் வாய்மையும் நாணும் ஆகிய இம்மூன்றிடத்தும் உயர்ந்த குடியில் பிறந்தவர்கள் தாமாகவே வழுவ மாட்டார்கள். 3. நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகைஎன்ப வாய்மைக் குடிக்கு. 953 எக்காலத்திலும் திரிதலில்லாத நற்குடியில் பிறந்தார்க்கு முக மலர்ச்சியும், உள்ளன. கொடுத்தலும். இனிய சொல் சொல்லலும், இகழாமையும் ஆகிய இந்நான்கும் உரியவை என்று கூறுவர். 4. அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர். 954 பலவாக அடுக்கிய கோடி அளவினதாகிய பொருளைப் பெற்றாலும் உயர்ந்த குடியின்கண் பிறந்தவர்கள் தம் ஒழுக்கம் குன்றும் தொழில்களைச் செய்யமாட்டார்கள். 5. வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பின் தலைப்பிரிதல் இன்று. 955 தொன்றுதொட்டு வருகின்ற நற்குடியில் பிறந்தவர்கள் தம்முடைய ஈகைத் தன்மையின் அளவு முன்னையதை விடச் சுருங்கியபோதும் தம்முடைய பண்புடையினின்று நீங்கமாட்டார்கள்.