பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

192



திருக்குறளார் தெளிவுரை 192 10. சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சுஅற்ற குலம்பற்றி வாழ்தும்என் பார். 956 குற்றமின்றி வருகின்ற தமது குடி மரபினோடு ஒத்து வாழக் கடவோம் என்று வாழ்பவர்கள் வறுமையுற்ற காலத்திலும் வஞ்சனையால் தமக்குப் பொருந்தாத செயல்களைச் செய்ய மாட்டார்கள். குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. 957 உயர்ந்த குடியில் பிறந்தவரிடம் காணப்படும் குற்றம் சிறிதாக இருந்தாலும் . மதியினிடம் தோன்றும் மறுப்போல் ஓங்கித் தோன்றும். - . நலத்தின்கண் நார்இன்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும். 958 நற்குடியில் பிறந்தவனாக வருபவனிடத்தில் அன்பில்லாமை காணப்படுமானால் அவனை அக்குலப்பிறப்பின் கண்ணே இவ்வுலகம் ஐயப்படும் என்பதாம். - நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல். 959 நிலத்தின் தன்மையினை அதனிடத்து முளைத்த முளை காட்டும். அதுபோல நற்குடியின் இயல்பினை அக்குலத்தில் பிறந்தார் வாய்ச் சொற்கள் காட்டும். நலம்வேண்டின் நானுடைமை வேண்டும் குலம்வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு. 960 ஒருவன் தனக்கு நன்மையினை விரும்புவானாயின் அவன் நாணமுடைமையினை விரும்புதல் வேண்டும். நற்குலமுடைமையினை விரும்புவானாயின் பனிழுப்படுவார். எல்லோரிடமும் பணிதல் வேண்டும்.