பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

ஒழிபு இயல்195



பொருட்பால் ஒழிபு இயல் 195 98. பெருமை (மிகச் சிறந்த நற்குனங்களால் பெரியாராயினோரது தன்மைகள்) 1. ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளியொருவற்கு அஃதுஇறந்து வாழ்தும் எனல். 97i. ஒருவனுக்குப் புகழாவது பிறரால் செயற்கரிய செய்வோம் என்று கருதும் ஊக்க மிகுதியேயாகும். ஒருவனுக்கு இழிவாவது அச்செயலினை ஒழித்து வாழக்கடவோம் என்று கருதுதலாகும். 2. பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா செய்தொழில் வேற்றுமை யான். 972 எல்லா மக்களுயிர்க்கும் பொதுவாகிய பிறப்பின் தன்மை ஒத்ததேயென்றாலும். பெருமை சிறுமை எனப்பட்ட சிறப்பியல்புகள் ஒவ்வா. ஏனெனில் அவை அவரவர் செய்யும் தொழில்களது வேறுபாட்டால் என்பதாகும். 3. மேல்இருந்தும் மேலல்லார் மேல்அல்லர் கீழ்இருந்தும் கீழ்அல்லார் கீழல் லவர். 973 செயற்கரிய செய்யாமல் சிறியராயினோர் உயர்ந்த நிலைகளில் இருந்தாராயினும் பெரியராகார். அச்செயல்களைச்செய்து ಶ್ಗ தாழ்ந்த நிலையில் இருந்தாலும் சிறியராகார். 4. ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டுஒழுகின் உண்டு. 974 மாறுபடாத மனத்தினையுடைய மகளிர் நிறைகுணத்தில் வழுவாமல் தம்மைக்காத்துக்கொண்டு ஒழுகுதல் போல பெருமைக்குணமும் ஒருவன் நிறை குணத்தில் வழுவாமல் தன்னைத்தான் காத்துக்கொண்டு நடப்பானாகில் உண்டாவதாகும். 5. பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல். 975 பெருமையுடையவர் தாம் வறுமையிலிருந்தாலும் பிறரால் செய்தற்கு அருமையான செயல்களை விடாமல் அவைகளைச் செய்யும் நெறியில் முடிவுபெறச் செய்வதில் வல்லவராவர்.