பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

196



திருக்குறளார் தெளிவுரை 196 6. 10. சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு. 978 ஆற்றல் மிகுந்த பெரியோரை வழிபட்டு அவர் இயல்பினைக் கைக் கொள்ளுவோம் என்னும் கருத்து மற்றைச் சிறியோர் மனத்தில் உண்டாகாது. இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான் சீரல் லவர்கண் படின். 977 சிறப்பானவை, தகாத சிறியவர்களிடத்தில் இருந்து விடுமானால் அவை செருக்கு மிகுந்து செய்யும் தொழில்களையே செய்யும் என்பதாம். பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து. 978 பெருமையுடையவர்கள் சிறப்பு உண்டானபோதும் பணிவுடன் அமைந்து ஒழுகுவார்கள். மற்றைச் சிறுமையுடையார் அது இல்லாதபோதும் தம்மை மெச்சிக் கொண்டு சிறப்பித்துக் கொள்வர். பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல். 979 பெருமைக்குணம் என்பதாவது காரணம் உண்டானபோதும் தருக்கின்றி இருத்தலாகும். சிறுமைக் குணமாவது காரணமின்றியே தன்னைச் செருக்கின்கண் நிறுத்திக் கொள்ளுவதாகும். - அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும். 98O பெருமையுடையவர்கள் பிறருடைய சிறப்பினையே கூறி அவமானத்தை மறைத்து விடுவார்கள். மற்றைச் சிறுமையுடையார் பிறருடைய நற்குணத்தை மறைத்துக் குற்றத்தினையே கூறிக் கொண்டிருப்பர்.