பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

ஒழிபு இயல்197



பொருட்பால் ஒழிபு இயல் 197 i4 99. சான்றாண்மை (நற்குணங்கள் பலவும் நிறைந்தவர்கள்) . கடன்ளன்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. 931 தமக்குச் சிறந்தது என்று அறிந்து சான்றாண்மையினை மேற்கொண்டு நடப்பவர்களுக்கு நல்ல குணங்கள் எல்லாம் இயல்பாய் இருக்கும் என்று நூலோர் சொல்லுவர். குணநலம் சான்றோர் நலனே பிறநலம் எந்நலத்து உள்ளது:உம் அன்று. 982 சான்றோர்க்கு அழகாவது குணநலன்களாகிய அழகேயாகும். அது நீங்கி ஏனைய உறுப்பு முதலியனவற்றால் உண்டான அழகு எந்த அழகிலும் உள்ளதாகாது. . அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால்பு ஊன்றிய தூண். 983 அன்பும் நாணமும், ஒப்புரவும் கண்ணோட்டமும், வாய்மையும் என்ற ஐந்தும் சால்பு என்கின்ற பாரத்தினைத் தாங்கும் தூண்களாகும். கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு. 984 தவம் செய்கின்ற நோன்பு என்பது ஒர் உயிரையும் கொல்லாத அறத்தின் கண்ணதாகும். அதுபோல், சால்பு என்பது பிறர் குற்றத்தினைச் சொல்லாத குணத்தின் கண்ணதாகும். ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை. 985 ஒரு செயலினைச் செய்து முடிப்பவரது வலிமை என்னவென்றால் அதற்குத் துணையாவாரைப் பணிந்து கூட்டிக் கொள்ளுதலாகும். சால்புடையார் தம் பகைவரின் பகைமையொழிக்கும் கருவியும் அதுவேயாகும்.