பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

6



திருக்குறளார் தெளிவுரை 6 6. செயற்குஅரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்குஅரிய செய்கலா தார். 26 10. செய்தற்கு அருமையான செயல்களைச் செய்பவர்கள் பெரியோர்கள் ஆவார்கள். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாமல் எளியவற்றைச் செய்பவர்கள் சிறியோர் களாவார்கள். சுவைஒளி ஊறு,ஓசை நாற்றம்என் றைந்தின் வகைதெரிவான் கட்டே உலகு. 27 சுவை, ஒளி, ஊறு. ஓசை,நாற்றம் என்ற ஐந்தின் கூறுபாட்டினை ஆராய்பவனின் (மனிதரின்) அறிவினிடத்தே உள்ளதாம் உலகம். நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். - 28 பயன் நிறைந்த மறைமொழி எனப்படும் சொற்களைச் சொல்லும் முனிவர்களுடைய பெருமையினை அவர்கள் ஆணையாகச் சொல்லும் அச்சொற்களே (மறைமொழி) காட்டிவிடும். குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது. 29 உயர்ந்த குனமென்னும் குன்றின்மேல் நின்ற முனிவர்களுடைய கோபம், இருப்பது கணநேரமேயானாலும் கோபிக்கப்பட்டவர்களால் அக்கோபம் தடுப்பதற்கு முடியாததாகும். அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். 30 எல்லா உயிர்களிடத்திலும் அருளுடன் நடந்துகொள்ளுவதால் அந்தனர் என்று சொல்லப்படுபவர் அறவோர்களாகிய முனிவர்களே யாவார்கள்.