பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

198



திருக்குறளார் தெளிவுரை 19. 6. i (). சால்பிற்குக் கட்டளை யாது.எனின் தோல்வி துலைஅல்லார் கண்ணும் கொளல். 986 சால்பாகிய பொன்னினை அளந்தறியும் உரைகல்லாகிய செயல் யாது என்றால் தம்மைவிட உயர்ந்தாரிடம் கொள்ளுவதாகிய தோல்வியை இழிந்தார் மாட்டும் கொள்ளுதலாகும். . இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு. 987 தனக்குத் துன்பத்தினைச் செய்தார்க்கும் சால்புடையார் இனியவற்றைச் செய்யாமற் போனால் அச்சால்பு வேறு என்ன பயனை உடைத்து? . இன்மை ஒருவற்கு இளிவன்று சால்புஎன்னும் திண்மைஉண் டாகப் பெறின். 988 சான்றாண்மை என்று சொல்லப்படும் வலிமையானது உண்டாகப் பெற்றால், ஒருவனுக்கு வறுமையானது இழிவுடையதாகாது. १ t ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார். 989 சான்றாண்மை என்கின்ற கடலுக்குக் கரை என்று சொல்லப்படுவோர். அக்கடலும் கரையுள் நில்லாமல் காலம் திரிந்தாலும் தாம் திரிய மாட்டார்கள். சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை. சான்றோர்கள் தங்களுடைய சான்றாண்மை என்னும் தன்மையில் குன்றி விடுவாராயின் மற்றைய இப்பூமியும் தன் பாரத்தினைத் தாங்காததாக முடியும்.