பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

ஒழிபு இயல்199



பொருட்பால் ஒழிபு இயல் 199 100. பண்பு உடைமை (பெருமை, சான்றாண்மைகளால் நிறைந்த நற்குணம்) 1. எண்பதத்தால் எய்தல் எளிது.என்ய யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு, 991 பாரிடத்திலும் எளிய தன்மையராய் இருத்தல் பண்புடைமையென்னும் அரியதான நல்வழியை அடைவதற்கு எளிது என்று நூலோர் சொல்லுவர். . அன்புஉடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு. 992 பிறர்மேல் அன்புடையவராதலும். தொன்றுதொட்டு வந்த நற்குடிப் பிறத்தலும் ஆகிய இவ்விரண்டும் ஒருவனுக்குப் பண்புடைமை என்று உலகத்தார் சொல்லும் நன்னெறியாகும். உறுப்புஒத்தல் மக்கள்ஒப்பு அன்றால் வெறுத்தக்க பண்புஒத்தல் ஒப்பதாம் ஒப்பு. 993 உடம்பின் உறுப்புக்களால் ஒத்திருத்தல் ஒருவனுக்கு நன் மக்களோடு ஒப்பாகாமையினால் அது பொருந்துவதன்று. இனிப் பொருந்துவதாகிய ஒப்பாவது பண்புடைமையால் ஒத்திருத்தலாகும். நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புடா ராட்டும் உலகு. 994 நீதியையும் அறத்தினையும் விரும்பிப் பிறர்க்கும் தமக்கும் பயன்படுதலை உடையவரது பண்பினை உலகத்தார் கொண்டாடி நிற்பர். . நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும் பண்பு:உள பாடறிவார் மாட்டு. 995 தன்னை இகழ்தல் என்பது ஒருவற்கு விளையாட்டின் கண்ணும் துன்பம் தருவதாகும். ஆதலால் பிறருடைய தன்மையறிந்து நடப்பவரிடத்தில் பகையுள்ள போதும் இனிமையான நற்பண்புகள் இருப்பனவாகும்.