பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

200



திருக்குறளார் தெளிவுரை 300 40. . பண்புஉடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன். 996 பண்புடையவர்கள் இந்த உலகின்கண்ணே உள்ளதால் உலகியல் எந்நாளும் இருந்து வருவதாகின்றது. அவ்வாறு இல்லையாயின் அது மண்ணில் புகுந்து மாய்ந்து போவதாகும். . அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர். 997 நன் மக்களுக்குரிய பண்பில்லாதவர்கள் அரத்தினைப் போன்று கூர்மையுடைய புத்தியுடையவரானாலும் ஓர் அறிவினையுடைய மரத்திற்கு ஒப்பாவார்கள். நண்புஆற்ற ராகி நயமில செய்வார்க்கும் பண்புஆற்ற ராதல் கடை 998 தம்முடன் நட்பு கொள்ளாமல் பகைமையினைச் செய்து ஒழுகுவாரிடத்திலும் தாம் பண்புடையவராக நடந்து கொள்ளாதிருத்தல் அறிவுடையார்க்குக் குற்றமேயாகும், . நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள். $393 பண்பில்லாததால் ஒருவரோடும் கலந்து மனமகிழும் தன்மை இல்லாதவர்களுக்கு மிகப்பெரிய இந்த ஞாலம் இருளில்லாத பகல் பொழுதிலும் இருளின்கண் இருந்ததாகும். பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலந்தீமை பால்திரிந் தற்று. 1sł00 பண்பில்லாதவன் பெற்ற பெரிய செல்வம் பயன்படாமல் கெடுதலால் பசுவின் நல்ல பால் பாத்திரத்தின் குற்றத்தினால் இன்சுவையின்றிக் கெட்டது போன்றதாகும்.