பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

ஒழிபு இயல்201



பொருட்பால் ஒழிபு இயல் 201 101. நன்றியில் செல்வம் (சேர்த்தவனுக்கும் பிறர்க்கும் பயன்படாமல் போகும் செல்வம்) 1. வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃது.உண்ணான் செத்தான் செயக்கிடந்தது இல். 1004 தனது வீடு நிறைய பெருஞ் செல்வத்தினைத் தேடிவைத்து உலோப குணத்தினால் உண்ணாதவன் உயிரோடிருப்பினும் செத்தவனேயாவான். அச்செல்வத்தின்கண் அவன் செய்வதோடு உரிமை இல்லாத காரணத்தினால் என்பதாம். 2. பொருளான்.ஆம் எல்லாம்என்று ஈயாது இவறும் மருளான்.ஆம் மானப் பிறப்பு. 1002 பொருளொன்றினால்தான் எல்லாம் உண்டாகும் என்று அறிந்து அதனைச் சேர்த்துப் பிறர்க்கு யாதொன்றும் ஈயாது உலோபத்தனம் செய்யும் மயக்கத்தினாலே ஒருவனுக்கு நிறைதலில்லாத இழிபிறப்பு உண்டாகும். 3, ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப் பொறை. 1003 பொருள் மிகுதியாகச் சேர்ப்பதையே விரும்பி அதன் பயனான புகழினை விரும்பாத மக்களது பிறப்பு, இப்பூமிக்குப் பாரமேயாகும். 4. எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால் நச்சப் படாஅ தவன். 1004 ஈதல் தன்மை இல்லாததால் ஒருவராலும் விரும்பப்படாதவன், தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்பதாக எதனை எண்ணுவானோ? 5. கொடுப்பது உம் துய்ப்பது உம் இல்லார்க்கு அடுக்கிய கோடிஉண் டாயினும் இல் 1005 பிறர்க்கு ஈகை செய்வதும் தாம் நுகர்வதும் ஆகிய இரண்டு செய்கையும் இல்லாதவர்களுக்குப் பலவாக அடுக்கிய கோடிப்பொருள் உண்டாயினும் பயன் ஒன்றும் இல்லையாம்.